திருவிழா படங்கள்

Photos from Flickr

  • IMG_2911
  • IMG_2910
  • IMG_2909

வ‌ர‌லாறு

ஆறுமுக‌ம்
வேலை விட்ட‌ இட‌ம்
ஈழ‌த்து வ‌ட‌ க‌ரையிருக்கும்
ஸ்ரீசெல்வ‌ச் ச‌ந்நிதி என்றோம்!

க‌ந்த‌ புராண‌ம் கால‌க‌ட்ட‌த்தில்
சிக‌ண்டி என்ற‌வோர் த‌வ‌ சிரேஷ்ட‌ர்
த‌ன் அடிய‌ரோடு முருக‌னைக்காண‌
க‌திர்காம‌ம் விரைந்தார் !
காட்டுவ‌ழியிலே யானை விர‌ட்ட‌
ஓர் வெத்திலை எடுத்து
ம‌ந்திர‌ம் ஜெபித்து அம்பாக‌
நாணேற்றி விட்ட‌போது!
வெத்திலை அம்பு ப‌ட்ட‌தும்
யானை உருமாறி ஓர்
க‌ந்த‌ர்வ‌ன் நின்றான்!
ஐராவ‌சு என்ற‌ க‌ந்த‌ர்வ‌ன்
த‌ன் யானைச் சாப‌ வ‌ர‌லாற்றை
எடுத்துரைக்க‌, முருக‌னும் தோன்றி
சிக‌ண்டியை க‌திர்காம‌ம் செல் என்றான்
ஐராவ‌சுவை நோக்கி
“என‌க்கு வ‌ட‌க்கே மௌன‌ப்பூசை
செய்யும் ஓர் ஸ்த‌ல‌முண்டு
சென்று, பூசைமுறைக‌ளைக்க‌ண்டு
என் பொன்ன‌டி சேர்வாய்”
அந்த‌ வ‌ட‌ப‌திதான் ஸ்ரீ செல்வ‌ச்ச‌ந்நிதி
ஸ்ரீ என்றாலே செல்வ‌ம்
பின் ஏன் ஸ்ரீ செல்வ‌ச்ச‌ந்நிதி
என்று கேட்க‌
“க‌ண‌க்கில் அட‌ங்கா செல்வ‌ங்க‌ளை
வாரி வ‌ழ‌ங்க‌விருக்கும் ஸ்த‌ல‌மாகையால்
இத‌ற்கு ஸ்ரீ செல்வ‌ச் ச‌ந்நிதி என்று
நானே பெய‌ரிட்டேன்” என்றான்
கார‌ண‌ம்!