திருவிழா படங்கள்

Photos from Flickr

  • IMG_2911
  • IMG_2910
  • IMG_2909

திருப்புக‌ழ்

செல்வ‌ச் ச‌ந்நிதி திருப்புக‌ழ்

இடைய‌னாய் வ‌ந்து ம‌ருத‌ர் க‌திர்காம‌ரை
இர‌ட்சிக்க‌ வ‌ந்த‌ முக‌ம் ஒன்று!
க‌திர்காம‌ம் த‌ன்னில் பூசை முறை காட்ட‌
அழைத்துச் செல்ல‌ வ‌ந்த‌ முக‌ம் ஒன்று!
க‌திர‌ம‌லைக் கொடியேற்ற‌ம் காண‌ என்று
கூட்டிச் செல்ல‌ வ‌ந்த‌ முக‌ம் ஒன்று!
க‌ழைத்துத் துவைய‌ல் உண்ண‌ கால் அடிப‌திக்க‌
க‌ல்லோடைக் க‌ரை நின்ற‌ முக‌ம் ஒன்று!
தேடிவ‌ரும் அடிய‌ர் ப‌சியைப் போக்கிட‌வே
அன்ன‌தான‌ம் செய்யும் முக‌ம் ஒன்று!
புண்ணிய‌னார் ச‌மாதி க‌ண்ட‌ ம‌ர‌த்த‌ருகே
கோவில் கொள்ள‌ வ‌ந்த‌ முக‌ம் ஒன்று!
ஆறும‌க‌மாகி ஏறும‌யிலேறி
வ‌ள்ளி தெய்வானை ம‌ங்கையுட‌ன்
வேலுமாகி வேற்ப‌டையுமாகி – அங்கே
வேழ‌முக‌னோடு நின்ற‌வ‌னே – உனை
வேண்டும் அடிய‌வ‌ரின் வேத‌னையைப் போக்க‌
செல்வ‌ச் ச‌ந்நிதியாய் அம‌ர்ந்த‌வ‌னே!